தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கடும் கண்டனம்

கடந்த 10 நாட்களில் இலங்கை ராணுவத்தினரால் தமிழகத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள்
கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.இது
குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநிலத்தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள்
அறிக்கை வெளியிடும் பொழுது,
பல நூற்றுக்கணக்கான தமி-ழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். தங்களுடைய அன்றாட வாழ்க்கைத்தேவைக்காக மீன்படிக்க
செல்பவர்களை எந்த காரணத்திற்காகவும் கொல்வது நியாயமற்றது. ஒருவேளை இலங்கை
கடற்பகுதியினுள் தமிழக மீனவர்கள் நுழைந்தால் கூட இலங்கை இராணுவம் அவர்களை கைது
செய்து சட்டபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமே தவிர அவர்களை படுகொலை
செய்வது மனிதாபமற்ற செயல்.குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு உடல் ஊனமுற்ற மீனவர்
ஜெயக்குமார் என்பவர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது.
இதுபோன்ற செயல்பாடுகளால் நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சம் நாட்டு மக்களிடையே
அதிகரித்துள்ளது. இந்திய அரசு இலங்கையுடன் நட்பு பாராட்டி வந்தபோதிலும் தமிழக மீனவர்கள்
படுகொலை செய்யப்படுவதை இலங்கை அரசு முடிவிற்கு கொண்டுவராதது வேதனைக்குரியது.நம்
நாட்டின் சர்வதேச எல்லைகளிலும், கடலோர எல்லை பகுதிகளிலும் ரோந்து படைகளை அதிகரிப்பதன் மூலமும், மீனவர்களுக்கு தேவைப்படும் வழிகாட்டி சாதனங்களையும் அவர்களுக்கு வழங்குவதன் மூலமும் மீனவர்களின் உயிர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை மத்திய அரசு வழங்க வேண்டும் என
மாநிலத்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் பிரிவால் வாடும் அவருடைய
குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை மாநில தலைவர் தெரிவித்தார்.