1992-ம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்துக் குண்டுவெடிப்புகளையும் விசாரிப்பதற்கு புலானாய்வு அமைப்பை நிறுவ வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 15
மற்றும் 16 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 1992 ஆம்
ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் மீண்டும் விசாரிக்க
சுதந்திரமான ஒரு புலனாய்வு அமைப்பை மத்திய அரசு நிறுவ வேண்டும் எனவும் சமீபத்தில்
வெளிச்சத்திற்கு வந்த தீவிரவாதம் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு
வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில்
உள்பட தற்பொழுது நடந்துவரும் குண்டுவெடிப்புகள் பற்றிய விசாரணை, போலீஸ் மற்றும்
அதிகார வர்க்கத்தில் நிலவும் மதரீதியான பாரபட்சம் நிலவி வரும் பட்சத்தில், இந்த தீவிரவாத
செயல்களின் பின்னணியில் செயல்படுபவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில்
போதுமானதாக இல்லை.
குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய உண்மைக் குற்றவாளிகள் சங்க்பரிவார்கள் என்ற உண்மை
வெளிச்சத்திற்கு வந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மத்திய அரசு மற்றும் மஹாராஷ்ட்ரா,
ஆந்திரா மாநில அரசுகள், தீவிரவாத வழக்குகளில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற் குழு
கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கீகுகு யின் உயர் மட்ட தலைவர்களை கைது செய்து அவர்களது
நடவடிக்கைகளை உற்று நோக்க வேண்டுமெனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை தேசிய
செயற் குழு கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆர்.எஸ்.எஸ்யின்
பயங்கரவாதச் செயல்கள் குறித்து புதிதாக வெளியான தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் கீகுகு யின் ஹிந்துத்வா தீவீரவாதத்தை பற்றி
பிரச்சாரம் செய்யும்.
ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்வதால் மட்டுமே அவ்வியக்கத்தின் பயங்கரவாத
அச்சுறுத்தலை ஒழித்துவிட முடியாது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. கடந்த
காலங்களில் 3 முறை இவ்வியக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகும் அதன் செயல்பாடுகளை
கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பா.ஜ.க உள்பட பல்வேறு
இயக்கங்களில் செயல்பட அனுமதிக்கப்படுவதால் இம்முயற்சி வீணானதாகும்.
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தினை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்
எனவும் இந்தக் கருப்புச் சட்டத்தில் கைதாகி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக்
சென்னை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை
தேசிய செயற் குழு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சட்டமே மனித உரிமைகளுக்கு எதிரானது.

இந்த கருப்புச் சட்டத்தை ஆயுதமாக பயன் படுத்துவது ஒரு முதிர்ச்சியடைந்த
ஜனநாயகத்திற்கு அழகல்ல. டாக்டர் பினாயக் சென் இந்த சட்டத்தின் கீழ் தான் குற்றம் சாட்டப்பட்டு
தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த செயல் கருப்புச சட்டங்கள் மூலம் அநீதிக்கு எதிராக
போராடும் சமூக ஆர்வலர்களை பழிவாங்க முடியும். பொடா மற்றும் தடாவிற்கு எதிராக எழுந்து
நின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், இடது சாரி வீரர்களும் கூட இந்த கருப்புச் சட்டத்தை
எதிர்க்காதது துரதிஷ்டவசமானதாகும். இந்த சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப்ப் பெற
வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தேசிய செயற் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கைதுச் செய்யப்பட்ட டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கிய
அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச் செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இத்தீர்ப்பு
தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரவேற்கிறது. கேரள மாநில உயர்நீதிமன்றம் டாக்டர்
ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கிய நிலையில் கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அரசு ரெனீஃப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டி ஜாமீன்
வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. குடிமக்களுடைய உரிமைகளின்
பாதுகாவலனாகவும், சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாகவும் கேரள மாநிலத்தை ஆளும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காண்பித்துக் கொண்டிருந்தது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா என்ற சமூக அமைப்பை ஒடுக்க எடுத்த முயற்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது
கட்டவிழ்த்துவிடப்பட்ட சித்திரவதைகள் மூலம் அவர்களின் சாயம் வெளுத்தது.

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் விதமாக அரசு நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்ட
வேளையில் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான முறையில் செயல்படும்
இயக்கத்தின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்டின் மீது
சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமுமில்லை எனக் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கும்
காரணத்தினால், அந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக இருந்தபோதிலும், தீவிரவாதச் செயலில்
ஈடுபடாதவரை அவர் மீது குற்றம் சுமத்த முடியாது என்று கூறியுள்ளது. இத்தீர்ப்பு பல்வேறு பொய்
வழக்குகளில் கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி
மக்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சத்தைத் தருகிறது.
டெல்லியில் அல்நூர் மஸ்ஜிதை இடித்த டெல்லி வளர்ச்சி ஆணையத்தை இக்கூட்டம்
வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இடித்த இடத்தில் மீண்டும் மஸ்ஜிதை கட்டிதர வேண்டும்
என தேசிய செயற் குழு வலியுறுத்துகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசியத் தலைவர்
இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப்,
துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களான
மவ்லானா உஸ்மான் பேக், பேரா.பி.கோயா,யாசிர் ஹசன், OMஅ.சலாம், முஹம்மது காலித்,
முஹம்மது ஷஹாப்புத்தீன், அனீஸ் அஹமது, அ.கு இஸ்மாயில், முஹம்மது ரோஷன் மற்றும் யா
முகைதீன் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.