பாப்புலர் ஃப்ரண்டின் பாபர் மஸ்ஜித் பற்றிய தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம்
பாபர் மஸ்ஜித் தீர்ப்பை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேதிய அளவில் செய்து வருகிறது. இப்பிரச்சாரம் டிசம்பர் 6லிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படும் மாநிலங்களில் துவங்கியது. பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், கருத்தரங்கம் போன்ற பல்வேறு வகையில் செய்யப்படும் இப்பிரச்சாரம் ஜனவரி 30ல் முடிவடையும். பாபரி மஸ்ஜித் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விளக்கியும் முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து தனது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை தொடர்ந்து செய்ய வலியுறுத்தியும் இப்பிரச்சாரம் செய்யப்படும்.