பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக் குழு தேனியில் 20.12.2010 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் அகில இந்திய சேர்மன் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் "தேசத்தை வலிமைப்படுத்தவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க முன்வரவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு கட்டுக்கோப்பான செயல்வீரர்கள் கொண்ட இயக்கம். எனவே சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழக்கூடிய செயல்வீரர்களை வார்த்தெடுப்பதிலும், ஒழுக்கம் கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை வளர்ப்பதில் பாப்புலர் ஃப்ரண்டின் அனைத்து மட்டதிலுள்ள தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக சீர்த்திருத்தத்தையும், அரசியல் முன்னேற்றத்தையும் வெறுக்கும் சக்திகள், பொய் பிரச்சாரத்தின் மூலம் இயக்கத்தின் கண்ணியத்தை மரியாதையை குலைக்க முயற்ச்சித்து வருகிறது என்று கூறினார். அதன் பிறகு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொது செயலாளர் கே.எம் ஷெரி அவர்கள் ஆண்டறிக்கையை சமர்பித்தார். அறிக்கையில், பரவலாக அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களின் சேர்க்கை நடைபெற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்றும் குறிப்பாக தென்னிந்தியாவில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சமூக பொருளாதார அரசியல் சூழல் குறித்த விவாதம் நடைப்பெற்றது. இயக்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வும் வருங்காலத்தில் செய்ய வேண்டிய அம்சங்கள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வருகின்ற இரண்டாண்டுகாலத்திற்கான தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி புதிய தேசிய தலைவர் மற்றும் செயலக உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:
சேர்மன் : இ.எம். அப்துர் ரஹ்மான்
துணைத்தலைவர்: எம். முஹம்மத் அலி ஜின்னா
பொது செயலாளர்: கே.எம். ஷெரிப்
செயலாளர்: யாசர் ஹசன்
பொருளாளர் : கே.பி. முஹம்மத் ஷெரிப்
அதனை தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
1. பொதுவாழ்வில் ஊழல்
2. பீகார் தேர்தல் தரும் படிப்பினை
3. பொய் பிரச்சாரம் மற்றும் ஊடுருவல் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
4. இடது சாரிகள் வலதுசாரிகளானது.
5. அப்பாவி சிறைவாசிகள் விடுதலை.
6. நீதி தேடும் பாபரி மஸ்ஜித்.
இறுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சேர்மனுடைய இறுது உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்குழுக்கூட்டம் மூன்று நாட்கள் நடைப்பெற்றது. இதில் பல்வேறு மொழிகளில் உறுப்பினர்கள் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஊடக தொடர்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தேசிய தலைமையகம்,
பெங்களூர்.
தீர்மானங்கள்:
1. பொதுவாழ்வில் ஊழல்:
சுதந்திர இந்தியா கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு ஊழல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஒரு போதும் ஒரே நேரத்தில் எல்லா ஊழல்களும் மக்களின் பார்வைக்கு வந்ததில்லை. கடந்த சில மாதங்களை ஊழல் மாதங்கள் என்று கூறும் அளவிற்கு பல கோடி ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்தியா வரலாற்றிலேயே இது ஒரு மோசமான கால கட்டம் என்று கருதும் அளவிற்கு இவ்ஊழலகள் அரசியல் வாதிகளோடு மட்டும் நிற்காமல் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் என பட்டியல் நீளுகிறது.
நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரக்களை போற்ற வேண்டிய ராணுவ அதிகாரிகள் தங்களது சொந்த சுய நலன்களுக்காக தியாகத்தை பயன் படுத்தியிருப்பதை ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இன்னும் 2ஜி அலைக்கற்றை ஊழலோ அரசின் அனைத்து நிர்வாக மட்டத்திலும் லஞ்சம் புரையோடி போயிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஒரு வரை ஒருவர் குற்றம் சாட்டி இந்த ஊழலில் தங்களுக்குள்ள பங்கினை உறுதிப்ப்டுத்திக் கொண்டுள்ளனர். இது போன்ற பல கோடி ஊழல்கள் பெருவதற்க்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதே இன்றிருக்கும் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும்தான் என்பதைப் பற்றி அக்கட்சிகள் கவலைப்படுவதில்லை. இவ்விரண்டும் ஊழல்களையும் எதிர்க்கும் பி.ஜே.பி யோ தனது சொந்த கட்சி ஆளும் கர்நாடகாவில் நடைப்பெற்ற நில மற்றும் சுரங்க ஊழலுக்கு காரணமான முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது கர்நாடகாவில் தான் நாட்டிலேயே அதிகமான லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் இயலாமையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு வண்மையாக கண்டிக்கிறது.
இவ்ஊழல்கள் குறித்து அரசியல் தலையீடற்ற சுதந்திர விசாரனை நடத்தப்பட வேண்டுமென்றும் குற்றவாழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது. இது போன்ற ஊழல்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்வாகத்தை கண்காணிக்கும் புதிய விதிமுறைகளை உருவாக்குவதன்மூலம் நிர்வாகத்தில் தேவையான மாற்றங்கள் ஏற்படுத்துவதன்மூலமும் எதிர்காலத்தில் இது போன்ற ஊழல்களை தடுக்கமுடியும்.
2. பீகார் தேர்தல் முடிவுகள்;
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு சாதியை அடிப்படையாக கொண்ட அரசியல் மூலம் மட்டும் முடியாது என்பதை உணர்த்தும் விதமாக பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு கருதுகிறது. வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் திறம்பட செயல்பட்டால்தான் நிதிஸ்குமார் மீண்டும் பதவிக்கு வரமுடிந்துள்ளது. மக்களின் பிரச்சனைகளக்கு தீர்வுகான் தவறிய லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் போன்றோர்களால வெற்றிக் கனியை பறிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த சாதி என்ற துருப்பு சீட்டும் தேர்தல்களத்தில் பழிக்கவில்லை.
நிதிஸ்குமார் என்னும் தனி மனிதரின் செல்வாக்கினால் மட்டும் தான் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றதே அல்லாமல் இந்துத்துவ அரசியல் பீகாரில் வளர்ச்சியடைந்துள்ளதாக கருதமுடியாது. குஜராத் முதல்வர் மோடி, பீகார் தேர்தல் பிரச்சாரம் செய்வதை நிதிஸ்குமார் தடுத்ததும் இதற்கு சான்றாகும். நாட்டின் அனைத்து சாதி மற்றும் பிராந்திய கட்சிகள் குறுகிய சிந்தனை கொண்ட வெற்று முழக்கங்களை விட்டுவிட்டு மக்களின் நலன்களுக்காக உண்மையாக பாடுபடவேண்டிய தக்க தருணமிது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.
3. விஷம பிரச்சாரம் மற்றும் ஊடுருவலுக்கு எதிரான கண்காணிப்பு:
காவல் துறையும் பத்திரிக்கை துறையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை போன்று செயல்படுவதை இந்த தேசிய பொதுக்குழு வண்மையாக கண்டிக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக புணையப்படும் செய்திகளும், பயமுறுத்தும் கதைகளும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடங்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்ட கற்பனைகளே தவிர எள்ளளவும் உண்மையில்லை. பின்னர் இது போன்ற செய்திகளையும் கதைகளையும் காவல்துறை, பிரமான பத்திரத்த்லும் குற்ற பத்திரிக்கையிலும் பயனபடுத்தி மக்களை சிறையில் அடைக்கின்றனர். இந்துத்துவ சித்தாந்தத்தால் தூண்டப்பட்ட அரசு நிர்வாகத்தில் ஒரு பகுதியினர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமையை அடக்கும் சூழ்நிலையை உருவாக்க முயல்வது மிகுந்த கவலையளிக்கிறது.
நாட்டின் பல சமூக ஜனநாயக மற்றும் அரசியல் தன்மையை பாதுகாப்பதற்கான நமது முயற்சியை போலி பிரச்சாரங்களாலும் அச்சுறுத்தல்களாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. நாட்டின் அனைத்து மக்களின் முன்னேற்றம் என்ற நமது அமைப்பின் குறிக் கோளையும் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது.
அதே வேளையில் நமது அமைப்பில் தீய எண்ணமுடையவர்கள் ஊடுருவிவிடாமல் இருக்க ஒவ்வொறு உறுப்பினரும் கண்காணிப்புடன் இருக்க வேன்டும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெயரை ஒரு சிலர் தங்களின் தவறான செயல்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்கின்றனர், அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களுடைய நபர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்குள் நுழைக்க முயற்சி செய்கின்றனர் இவை அனைத்தும் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தவும் ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு ஆதரவை பெறவேயாகும்.
4. வலது சாரியாகும் இடது சாரிகள்:
நடந்து முடிந்த மேற்கு வங்க, கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் கம்யூனிஸ அரசின் சிறுபான்மை விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பு என்றே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இப்பொதுக்குழு கருதுகிறது. மிதவாத ஹிந்துத்துவத்தை ஆதரித்தும், முஸ்லீம் மற்றும் கிருஸ்தவ சிறுபான்மை மக்கள் குறித்த அச்சஉணர்வை ஏற்படுத்தியும் பெருபான்மை இந்துக்களின் ஓட்டுகளை பெற்று விடலாம் என்ற
சி.பி.எம் ன் திட்டம் எதிர் மறை விளைவையே ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் விழிப்புணர்வடைந்த முஸ்லீம்களும், பிற்ப்படுத்தப்பட்ட மக்களும் இடது முண்ணணிக்கு படு தோல்வியை அளித்தனர். இனிமேலும் இடதுசாரிகள் தங்களின் நிலையை மாற்றி சிறுபான்மை மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்க முயலவில்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும்
5. அப்பாவி சிறைவாசிகளின் விடுதலை:
நாட்டில் நடைப்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஆல் இயக்கப்படும் இந்துத்துவ மதவாத சக்திகள் தொடர்பு நிரூபிக்கப்பட பின்பும், சிறையிலிருக்கும் அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்யப்படாதது வேதனை அளிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இக்குழு கருதுகிறது. மக்காம் மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் சச்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கு காரணமான உண்மையான தீவிரவாதிகள் காவல்துறையால் கண்டரியப்பட்டு பொதுமக்களின் நிர்பந்தம் காரணமாக கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் விசாரனை அதிகாரிகள் முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கி சிறையில் அடைத்தனர். அவர்கள் இன்னும் சிறைச்சாலைலளிலேயே வாடுகின்றனர். பல் ஆண்டுகளாக வெளிவரமுடியாத படி கொடுமையான சட்டத்தின் மூலம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வேளையில் இதுவரை கண்டறியப்படாத மற்ற குண்டு வெடிப்பு குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது சுமத்தி அவர்களின் விடுதலையை தடுத்து வருகின்றனர. கர்நாடகா காவல் துறையால் கேரளாவின் பி.டி.பி தலைவர் மதானி மீது புனையப்பட்ட வழக்கும் இதே போன்றுதான், கேரளாவைச்சேர்ந்த இன்னும் சில இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்றனர். இத்தகைய சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் மனித உரிமை மற்றும் தனி மனித சுதந்திரத்தை மீறுவதாகும் என தேசிய பொதுக்குழு கருதுகிறது. மேலும் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நீரூபிப்பதற்க்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
6. நீதி தேடும் பாபரி மஸ்ஜித்:
பாஸிஸ்டுகளால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் அதே இடத்தில் கட்டித்தரவும் இடிப்புக்கு காரணமாக லிபர்ஹான் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. பாபரி மஸ்ஜிதின் நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பாபரி மஸ்ஜித் விஷயத்தில் வழங்கப்பட்ட அநீதி மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பின் மீது இந்துத்துவ பாஸிஸ்டுகள் தாக்குதல் குறித்து விளக்கப்படும் டிசம்பர் 6 முதல் தொடங்கி ஜனவரி 30, 2011 வரை நடைபெறும் இந்த தொடர் பிரச்சார்த்தில் சுவரொட்டி, துண்டு பிரசுசம், பேரணி, தர்ணா, பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்படும்.
நாட்டின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையும் பாதுகாக்க அக்கறை கொண்ட பொதுமக்கள் முன்னின்று இப்பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டும் என்று தேசிய பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.