ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக கடந்த மாதம் டெல்லியில் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி நடைப்பெற்ற மாநாட்டை தொடர்ந்து, டிசம்பர் மாதம் 23 தேதி அன்று உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஹுஸுல் இன்ஸாஃப் என்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் உட்பட, உலமாக்கள், பள்ளி இமாம்கள், அரசியல் கட்சியின் பிரநிதிகள், சமூக ஆர்வலர்கள், என அதிகமானோர் கலந்து கொண்டனர். இராஜெந்திர சர்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமட்டியின் அறிக்கையை மத்திய அரசு உடனே அமுல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

மாநிலம் முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் மீது போலியான வழக்குகள் தொடரப்பட்டு தீவிரவாதி என கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. மேலும் முஸ்லிம் சமூகம் கல்வி ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும், இஸ்லாமிய திருமணத்தில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
மொளலானா ஜுனைத் காஸிமி, (இமாம், மஸ்ஜிதே பிலால், மீரட்) அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய செயற்குழு உறுப்பினர், ஹாபிழ் மன்சூர் அலி கான் சிறப்புரை வழங்கினார். சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) வின் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்ஞாப் மாநிலத்தின் நிர்வாகிகளான, அப்துல் ரஷீத் அகவான் மற்றும் AIIC யின் ராஜஸ்த்தான் மாநில தலைவர் மொளவி முஹம்மது ஹனீப் அல்வாரி, மொளானா DR. அஸ்ரார அஹமது ஃபலஹி, மொளான இபுராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். மதரஸா உஸ்மானியாவின் முஅத்திம் சஹர் காழி மொளானா நஃபீஸ் அகமது, காரி உபைதுர்ரஹ்மான் மற்றும் மதரஸா ஃபைஜுல் இஸ்லாம் முஅத்திம் மொளானா முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் முக்கியத்துவத்தை பற்றி உரை ஆற்றனார்கள். மொளானா முஸ்தஜாப் ஹக், (AIIC, பொதுச்செயலாளர், மீரட்) சிறப்பு விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்பகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சந்திரா வீர் சிங் மற்றும் அக்கட்சியின் பிரதிநிதி அதுல் பிரதான், அப்துல் காதர், மற்றும் ஜிலா பரிஷத்தின் தலைவர் மநீந்திர பால் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்ததோடு அதற்க்காக தாங்கள் ஒத்துழைப்போம் என்று வாக்குறுது அளித்தனர். எராளமான பொதுமக்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.